உலகம் முழுவதும் சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு இளம்பெண்ணிற்கு எதிராக ஒரு கொடூர குற்றம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியை சந்தேகப்பட்டு குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். எதற்காக அவர் அப்படி செய்தார்? அவர் சந்தேகப்பட காரணம் என்ன?


பிரிட்டனின் மிடில்ஸ்ப்ரோ பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ் பிலேக்மோர்(33). இவர் 31 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பின்னர் ஒரு நாள் மீண்டும் தன்னுடைய காதலியிடம் இருந்து பணம் கேட்க பிலேக்மோர் சென்றதாக தெரிகிறது. 



வீட்டின் கழிப்பறையில் ஆணுறை கவர்.. காதலியை கொடூரமாக கொல்ல முயற்சித்த காதலன்.. பயங்கர பரபரப்பு..


அந்த சமயத்தில் அவருடைய வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணில் வீட்டில் கழிப்பறையில் ஆணுறை கவர் ஒன்று இருந்ததை பிலேக்மோர் பார்த்துள்ளார். அந்த காண்டம் கவரை பார்த்துடன் அவர் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். அந்த கோபத்துடன் சென்று இளம் பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இறுதியில் வாக்குவாதம் முற்றிப்போக அப்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். சரமாரியாக 31 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பெண் இரத்த வெள்ளத்தில் தப்பி வெளியே வந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த அவருடைய 7 வயது குழந்தையையும் பத்திரமாக காப்பாற்றி இவர் வெளியே அழைத்து சென்று வந்துள்ளார். 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். உடம்பின் முக்கியமான இடங்களில் கத்தி குத்தி வாங்காததால் அப்பெண் சற்று விரைவாக உடல்நலம் தேறினார். அவர் அளித்த புகாரின் பெயரில் பிலேக்மோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அப்பெண்ணை அவர் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவரைத்தான் அப்பெண் கத்தியால் தாக்க முயற்சி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். 




இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையினர் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல்களை சமர்ப்பித்தனர். அதில்  பிலேக்மோர் அப்பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டது தெரியவந்தது. மேலும் அப்பெண்ணிடம் இருந்து இவர் பணம் வாங்கியது தெரியவந்தது. இறுதியில் நீதிமன்றத்தில் பிலேக்மோர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதன்பின்னர் தற்போது அவருக்கு கொலை செய்ய முயற்சி செய்ததற்காக தண்டனையை வழங்கியுள்ளது. காதலியின் வீட்டில் ஒரு ஆணுறை கவர் இருந்ததால் ஒருவர் காதலியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: பஞ்சம் பிழைக்க தப்பித்துச் சென்றவர்கள் உயிரைப் பறித்த கோர விபத்து: மெக்சிகோ சோகம்