மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது. இங்கு மயிலாடுதுறை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கும் நெல்லை அரசு கொள்முதல் செய்து, இந்த அரிசி ஆலையின் மூலம் அரைக்கப்பட்டு, அந்த  அரிசியே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.  இங்கு இருந்து ரேஷன்  கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகள் தரமற்ற இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்துள்ளது.


நகைக்கடன் தள்ளுபடி வேண்டுமா? - அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு




இதனை தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவது கண்டித்தும், தரமான அரிசி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் மயிலாடுதுறை மாவட்டத்தின் உள்ள அரசு நியாய விலைக் கடைகள் முன்பு பல்வேறு கட்ட போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.


மனைவியின் நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொன்று கரும்பு தோட்டத்தில் எரித்த கணவன் கைது




இந்நிலையில் இன்று சிதம்பரம்-மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உண்பதற்கு தகுதியற்ற தரமற்ற அரிசியைத் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்தும், தரமான அரிசி வழங்க மாநில அரசை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


TN All Party Meet:நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் - தமிழ்நாடு அரசு




இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும் பெண்கள்  ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் தற்போதைய விலைவாசி உயர்வால் ஒரு வேளை உணவை கூட சத்தானதாக உண்ண முடியாத நிலையே அரசு வழங்கும் அரிசியை இவ்வாறு சமைத்து உண்ண முடியாத தரமற்ற வணங்குவது மிகவும் கண்டனத்துக்கு உரியது என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர


ட்விட்டர் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர


யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...