திருவண்ணாமலை மாவட்டம் கலஸ்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த ஆரிமுத்து மகன் ராஜா (33) இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருடைய மனைவி கௌதமி (28) இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா மதுவிற்கு அடிமையாகி ஆட்டோ ஓட்டுவதற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.  இவர் மது போதையில்  மனைவியை  அடித்து அவரிடம் இருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் மனைவியின் மேல் உள்ள சந்தேகதால் மனைவியை தினந்தோறும் அடித்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று  மாலை கௌவுதமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் கௌதமியின்  உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். அதனை தொடர்ந்து  காலையில்  ராஜாவின் தாயார் பச்சையம்மாள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.



அப்போது கரும்பு தோட்டத்தில் எரிந்த நிலையில் கவுதமியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பச்சையம்மாள், உடனடியாக அங்கு இருந்த நபர்களிடம் கூச்சிலிட்டுள்ளார். பின்னர் இச்சம்பவம் உறவினர்களுக்கும் மற்றும் மங்கலம் காவல் நிலைய காவல்துறையினருங்கும் தெரியவந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், எரிந்த நிலையில் இருந்த கௌதமியின் சடலத்தை மீட்டு  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கௌதமியின் கணவர் ராஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 



அப்போது மது குடிப்பதற்கு பணம் தராததாலும், கௌவுதமிக்கும் எங்கள் பகுதியில் உள்ள ஒரு நபருக்கும் கள்ளதொடர்பு உள்ளதாக சந்தேகம் அதிகமாக ஏற்பட்டதாலும், எங்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கௌவுதமியை கொலை செய்ய முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை வீட்டில் கௌதமியின் கழுத்தை நெரித்து கொன்றேன். மேலும் கொலையை மறைக்க அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கணவனே அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கழன்று விழுந்த லாரியின் டீசல் டேங்க்