மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் ஆகியோரை தகுதியற்றவர் என்றும், ஆபாச வார்த்தைகளாலும் சமூக வலைதளங்களில் தனிமனித தாக்குதல் நடத்தி வருவதாக, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், மண்டல செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்தனர்.


சென்னை கல்லூரிகளில் கணிதத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் குறைவு: கல்வியாளர்கள் கவலை..





சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தது குறித்து ஏற்கெனவே இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கில் எதிர்தரப்பினரான மீத்தேன்  திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளை சேர்த்து சட்ட நடவடிக்கைகள் எடுத்தும் தடுத்து நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். 


ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் - நீதிமன்றம்




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 


தேனியில் முதல் போக நெல் அறுவடை தொடக்கம் - இரண்டாம் போக நெல் சாகுபடி செய்வதில் சிக்கல்


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்து தெரிவிக்கும் வகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் கட்சி தொண்டர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற அவதூறு கருத்துக்களை பொய்யாக சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இந்த போக்கினை அவர்கள் மாற்றி வேண்டும் என்றும், இல்லாவிட்டால்  மயிலாடுதுறை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


மயிலாடுதுறை: புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று!


புலிகள் சரணாலயமான மேகமலை வனப்பகுதி - வெளியேற்றப்படும் 39 கிராம மக்கள்...!


பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடிய மருத்துவர்கள்.! இறந்து பிறந்த குழந்தை..! உறவினர்கள் குற்றச்சாட்டு