புலிகள் இனங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு 1972 ஆம் ஆண்டு புலிகள் சரணாலயம் காப்பகம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் சரணாலயம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் என நான்கு புலிகள் சரணாலயம் உள்ளன. புலிகள் சரணாலயமானது புலிகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டும், புலிகள் வாழிடங்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.




தற்போது தேனி மாவட்டத்தில் மேகமலை- ஸ்ரீவில்லிபுத்தூர் இரண்டு  வன பகுதிகளை இணைத்து ஒரு லட்சம் ஹெக்டருக்கு மேலான வனப்பகுதிகளை மத்திய அரசு தற்போது பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் சரணாலயம் மாறியுள்ளது இந்தியாவில் 51ஆவது புலிகள் சரணாலயம் ஆகவும் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதால். இதன் மூலம் 1 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு, 63 வகையான பாலூட்டிகள், 323 பறவையினங்கள் புலிகள் சரணாலயமாக மாற்றுவதால் பாதுகாக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் புலிகள் சரணலாயத்தின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.




மேலும் தேனி அருகே உள்ள வைகை அணை உருவாவதற்கான நீர் ஆதாரமாக விளங்கிய மூல வைகை நதி உயிர்பெரும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேகமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள கடமலை, மயிலை பகுதிக்குட்பட்ட 5 ஊராட்சி ஒன்றிய கிராமங்களான சுமார் 39 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது இந்த வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல்உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர். இந்தப் பகுதி மக்களின் பிரதான தொழில் இலவம்பஞ்சு பிரித்தல், மலைகளில் மாடு, ஆடுகள் மேய்த்தல் கால் நடைகள் வளர்ப்பு போன்ற தொழிலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.





இந்த சூழலில் தற்போது புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டதால் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் தாங்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் பல ஆண்டுகளாக தங்கள் இப்பகுதியில் குடியிருந்து வருவதாகவும் இதனால்  தாங்கள் இருக்கும் இடத்திற்கு வனச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் என்று ஆண்டிபட்டி பகுதியில் கிராமமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், 


 


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!