கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு நரிக்குறவர் சமுதாய மக்கள் பாசிமணி, ஊசி மணி அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று வரும் மாணவனுக்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே  பல்லவராயன்பேட்டை கிராமத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி உள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், 8 -ஆம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற நரிக்குறவ சமுதாய மாணவன் கோவா மாநிலத்தில் யூத் அன்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் கடந்த 3 ஆம் தேதி முதல் 5 ஐந்தாம் தேதி வரை நடைபெற்ற நேஷனல் பெடரேஷன் கப் 2023 -க்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டிற்காக கலந்து கொண்டு விளையாடினார். 


Bigg Boss Kamal Haasan: வீட்ட இன்னும் எத்தன கூறு போடப்போறாங்களோ.. கமல்ஹாசனின் முதல் வீக் எண்ட் பிக்பாஸ் ப்ரோமோ!




இறுதிப்போட்டியில் தெலுங்கானா மாநிலத்துடன் மோதி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தேசிய  அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவனுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நரிக்குறவர் சமுதாயத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலைமையில் ரயில் நிலையம் வந்த அம்மக்கள், வெற்றி பெற்ற மாணவன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை அணிவித்தும், மாணவனுக்கு  பாசி, ஊசி மணி மாலை அணிவித்து வாழ்த்தி பாராட்டும் தெரிவித்தனர்.


Israel Attack: இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றம்.. 5000 ராக்கெட்டுகளை ஏவிய பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள்.. பலர் உயிரிழப்பு..




மேலும், பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று வரும் மாணவனுக்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் இது போன்று குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Asian Games 2023: ஆசிய விளையாட்டில் புதிய வரலாறு - பேட்மிண்டனில் முதல் தங்கம் வென்ற இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி