பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் இடம்பெறும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Continues below advertisement

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தொடங்கி ஐந்து நாள்களை சண்டையும் சச்சரவுமாகக் கடந்து, இன்று வீக் எண்ட் எபிசோடை நெருங்கியுள்ளது. அதில் பேசிய கமல்ஹாசன், “பிக் பாஸ் டீம் ரொம்ப உக்காந்து யோசிச்சு இந்த வீட்ட ரெண்டாக்கின எப்படி இருக்கும்னு திட்டம் போட்டு அத செயல்படுத்தி மார் தட்டிட்டு இருந்தா, இவங்க உள்ள போய் முதல் வாரமே ரெண்டாக்கிட்டாங்க.

இன்னும் எத்தனை கூறுகளா அத கூறுபோட போடாங்க அப்படிங்கறத நாம பேசி தெரிஞ்சிபோம்” என கலகலப்பாக பேசியுள்ளார்.

Continues below advertisement

 

கமல் இடம்பெற்றுள்ள முதல் வீக் எண்ட் ப்ரோமோவாக இது அமைந்து இன்றைய எபிசோட் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிக்பாஸின் முதல் வாரமான இந்த வார எபிசோட்களில் சில தினங்களாகவே ஜோவிகாவின் படிப்பு குறித்து சக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு சக போட்டியாளர்கள் பேசுவது ஜோவிகாவுக்கு பிடிக்கவில்லை.   

ஜோவிகா இதுபற்றி பலமுறை பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட நிலையில், நேற்றைய வெள்ளக்கிழமை எபிசோடில் அவர் வெடித்து தள்ளிவிட்டார். விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே பழக்கம் இருந்த நிலையில், இவர்களுக்குள் மோதல் வெடித்தது பேசுபொருளானது.

பேஸிக் எஜூகேஷன் அனைவருக்கும் வேண்டும் விசித்ரா வாதாட, எனக்கு படிப்பு வரலனா விட்டுடுங்க எனும் ரீதியில் ஜோவிகா பேசினார். இந்த விவகாரம் மேலும் முற்றி நீட், தற்கொலை என ஜோவிகா பேச விசித்ரா அடிப்படைக் கல்வி முக்கியம் என்றும் தமிழ் எழுதிக்காட்டு என்றும் ஜோவிகாவிடம் சொல்ல நேற்றைய எபிசோடில் அனல்பறந்தது.

மேலும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பல உரையாடல்கள் நிகழ்ந்தன. இந்நிலையில், ஜோவிகா - விசித்ரா பிரச்னை பற்றி கமல் ஒர் அரசியல்வாதியாகவும், உச்ச நட்சத்திரமாகவும் சரியான தீர்ப்பு சொல்வார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

மேலும், பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், பவா செல்லதுரை ஆகியோரும் இந்த வாரம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களாக வலம் வரும் நிலையில், அவர்கள் குறித்தும் கமல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  மற்றொருபுறம் இந்த வாரம் நடிகரும் பாடகருமான யுகேந்திரன் எலிமினேட் ஆனதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் இந்த பிக்பாஸ் சீசன் தொடங்கிய நிலையில், இந்த வாரம் ஒருவர் எலிமினேட்டாக உள்ளார். இந்த வார இறுதியில் தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் வாரம் அனல் பறக்க சண்டை, சச்சரவுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: The Road Review: த்ரிஷாவின் தி ரோடு சுவாரஸ்யம் கூட்டியதா? இல்லை ஸ்பீட் பிரேக்கரா? முழு விமர்சனம்!

Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!