மயிலாடுதுறையில் சாராய விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும், சாராய வியாபாரியை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு பொதுமக்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிக அருகில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலில் மதுபானங்களின் விலை குறைவு என்பதாலும், அங்கு எளிதில் சாராயம் கிடைப்பதாலும், அங்கிருந்து மதுபானம் மற்றும் சாராயங்கள் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டாலும், அவர்களின் கண்களில் மண்ணைத்துவம் விதமாக சாராயம் மட்டும் மதுபான கடத்தலை தடுத்து நிறுத்த முடியாத வண்ணம் கடத்தல் காரர்கள் தொடர்ந்து கடத்தல் ஈடுபடுகின்றன.


Parliament Security Breach: ‘எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன’ - நாடாளுமன்ற தாக்குதல் குறித்து வாய் திறந்த அமைச்சர் அமித் ஷா




இதனால் மாவட்டம் முழுவதிலும் பாண்டி சாராயம் விற்பனை சகஜமாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சி ஒன்றாவது வார்டில் உள்ள ஆடிய பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கலாநிதி என்பவர் தொடர் சாராய வியாபாரத்தில் ஈடுபடுவதால் 1 -வது வார்டு மற்றும் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டவெளி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பலமுறை அப்பகுதியைச் சேர்ந்த நகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், திருவிழந்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சுபாஷ் தலைமையில் பொதுமக்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


Malavika Mohanan: அட.. ‘அனிமல்’ நாயகன் ரன்பீர் கபூருடன் இணையும் நம்ம மாளவிகா.. எந்தப் படம் தெரியுமா?




ஆனால், அந்த புகார்கள் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நடவடிக்கை எடுக்கப்படாததால் தொடர்ந்து பாண்டி ஐஸ் சாராயம் அப்பகுதியில் விற்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையில் வீசி எறிந்த 100-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை திரட்டி, பூம்புகார்- கல்லணை சாலையில்  போட்டவெளி மெயின்ரோட்டில் சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Year Ender 2023: டாடா முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை.. 2023 இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற படங்கள்!




காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் சாராயம் வியாபாரியிடம் காவல்துறையினர் பணம் வாங்கி செல்வதாக  பொதுமக்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாராய விற்பனையை தடுத்து சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நடைபெற்ற போராட்டத்தை அடுத்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் சபிதா தேவி பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை பொதுமக்கள் விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Adhik Ravichandran: நடிகர் பிரபு மகளை கரம் பிடித்த “மார்க் ஆண்டனி” இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.. குவியும் வாழ்த்து..!