2023ம் தமிழ் சினிமாவிற்கு ஒரு பொற்காலமாகவே அமைந்தது. இந்த ஆண்டு வெளியான ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன. பல அறிமுக இயக்குநர்களின் என்ட்ரியும், மாஸ் இயக்குநர்களின் படங்களும் கோலிவுட்டின் பக்கம் இந்திய சினிமாவின் கவனத்தைத் திருப்பின. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படங்களின் லிஸ்ட் இதோ!


டாடா :


அறிமுக இயக்குநர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், கே. பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் நடிப்பில் பிப்ரவரி 10ம் தேதி வெளியானது.


 



குட் நைட் :


அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் நடிப்பில் மே 12ம் தேதி வெளியானது.


இறுகப்பற்று :


யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோரின் நடிப்பில் அக்டோபர் 6ம் தேதி வெளியானது.


 



போர் தொழில் :


விக்னேஷ் ராஜா இயக்கத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜூன் 9ம் தேதி வெளியான திரைப்படம் போர் தொழில்.


சித்தா :


அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்டோரின் நடிப்பில் செப்டம்பர் 28ம் தேதி வெளியானது.


அயோத்தி :


அறிமுக இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ், அஞ்சு அஸ்ரானி உள்ளிட்டோரின் நடிப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.


 



பொம்மை நாயகி :


சுந்தரமூர்த்தி கே.எஸ் இயக்கத்தில் யோகி பாபு, ஹரி கிருஷ்ணன், அப்பாதுரை, ஜி.எம். குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் பிப்ரவரி 3ம் தேதி வெளியானது. 


பார்க்கிங் :


அறிமுக  இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. 


கொன்றால் பாவம் :  


டயல் பத்மநாபன் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி உள்ளிட்டோரின் நடிப்பில் மார்ச் 10ம் தேதி வெளியானது. 


 



ஜோ: 


ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் , மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா உள்ளிட்டோரின் நடிப்பில் நவம்பர் 24ம் தேதி வெளியானது. 


அடியே: 


விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்  ஜி.வி. பிரகாஷ்குமார், கௌரி ஜி. கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரின் நடிப்பில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியானது. 


விடுதலை :


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு உள்ளிட்டோரின் நடிப்பில் மார்ச் 31ம் தேதி வெளியானது.


ஆகஸ்ட் 16, 1947 :


என்.எஸ். பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ஜேசன் ஷா, புகழ், ஜூனியர் எம்ஜிஆர் , ரிச்சர்ட் ஆஷ்டன், ரேவதி சர்மா உள்ளிட்டோரின் நடிப்பில் ஏப்ரல் 7ம் தேதி வெளியானது. 


மாலை நேர மல்லிப்பூ:


சஞ்சய் நாராயணன் இயக்கத்தில் வினித்ரா மேனன் மற்றும் அஸ்வின் நடிப்பில் ஜூன் 9ம் தேதி வெளியானது.


அநீதி :


வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி உள்ளிட்டோரின் நடிப்பில் ஜூலை 21ம் தேதி வெளியானது. 


 



தலைக்கூத்தல் :


ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா காஷ்யப் உள்ளிட்டோரின் நடிப்பில் பிப்ரவரி 3ம் தேதி வெளியானது.


பரம்பொருள் :


அறிமுக இயக்குநர் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் ஆர்.சரத்குமார் மற்றும் அமிதாஷ் பிரதான் நடிப்பில் செப்டம்பர் 1ம் தேதி வெளியானது.  


மாமன்னன் :


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜூன் 28ம் வெளியானது.


யாத்திசை :


தரணி இராசேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்திரன், சேயோன், ராஜலட்சுமி உள்ளிட்டோரின் நடிப்பில் ஏப்ரல் 21ம் தேதி வெளியானது. 


 



ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் :


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் நவம்பர் 10ம் தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாக வெளியானது.


மாவீரன் :


மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டோரின் நடிப்பில் ஜூலை 14ம் தேதி வெளியானது. 


டிடி ரிட்டர்ன்ஸ் :


 அறிமுக இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சூர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜூலை 28ம் தேதி வெளியானது. 


லியோ :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், அர்ஜுன் உள்ளிட்டோரின் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியானது.


ஜெயிலர் :  


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் , ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா பாட்டியா, சுனில், மிர்னா மேனன், யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. 


பார்ட்னர் :


அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி பினிசெட்டி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, பல்லக் லால்வானி , பாண்டியராஜன் , ரோபோ சங்கர் , ஜான் விஜய் , ரவிமரியா , டைகர் தங்கதுரை, முனிஷ்காந்த், ராஜேந்திரன் , மைனா நந்தினி மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரின் நடிப்பில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியானது. 


அஸ்வின்ஸ் :


தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் நடிப்பில் ஜூன் 23ம் தேதி வெளியானது. 


மார்க் ஆண்டனி :


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா, சுனில், செல்வராகவன், அபிநய உள்ளிட்டோரின் நடிப்பில் செப்டம்பர் 14ம் தேதி வெளியானது.