அனிமல்

ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் அனில் கபூர், ட்ரிப்தி டிம்ரி, பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களிலும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள் . 

Continues below advertisement

வசூல் வேட்டையில் அனிமல் திரைப்படம்

அனிமல் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ட்ரிப்தி டிம்ரி இணையதளத்தில் வைரலாகி வருகிறார். இந்தப் படத்தில் நடித்த  நடிகர் பப்லு ப்ரித்விராஜ் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படியாக அனிமல் படத்தின் நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் ஒரு தரப்பு மக்களால் கொண்டாடப்பட, மறு தரப்பு மக்கள் கடுமையாக படத்தை விமர்சித்து வருகிறார்கள். ஆணாதிக்க கருத்துகள், பெண்களுக்கு எதிரான திசைதிருப்பப்பட்ட வன்முறையான காட்சிகள் என அனிமல் படத்தில் சர்ச்சையை கிளப்பும் பல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 

கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அனிமல் திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் வசூல் ஈட்டிய படங்களில் இணைந்துள்ளது. 14 நாட்களில் இப்படம் 784.45 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.

Continues below advertisement