மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு வளையல் காப்பு நிகழ்வு செய்து வைத்த தம்பதியினரின் செயல் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு என்று தனி இடம் உண்டு, நன்றி உணர்வுக்கு பெயர் போனது என்பதால் மற்ற வளர்ப்பு பிராணிகளை காட்டிலும் நாய்களுக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
சமீபகாலமாக மனிதர்கள் தங்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளின் மீது உள்ள பற்றால் மனிதர்களை போன்று திருமணம் செய்து வைப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது, சீமந்தம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவது என பல்வேறு நிகழ்வுகள் தற்போது ஆங்காங்கே நடந்தேறி வருவது வழக்கமாகி வருகிறது. தற்போது நிகழ்வு ஒன்று தான் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்று உள்ளது.
சசிகலா இனி மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும்!” - நீதிமன்ற தீர்ப்பையடுத்து முன்னெழும் ஆலோசனைகள்
சீர்காழி மதீனா நகரை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத தம்பதியரின் மகன்களான நிதீஷ் குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் தங்களது உறவினர் வீட்டில் இருந்து நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து அதற்கு சுக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். காலப்போக்கில் குடும்பத்தில் ஒருவராக மாறிய சுக்கி கருவுற்றுள்ளதை கால்நடை மருத்துவர் மூலம் அறிந்த தம்பதி, சுக்கிக்கு சீமந்தம் செய்ய முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த அண்டை விட்டார்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து, பழங்கள் வைத்து ஐந்து விதமான உணவுகள் செய்து, நாயை நாற்காலியில் அமர வைத்து நாய்க்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் வைத்து பெண்களுக்கு சீமந்தம் செய்வது போல் நாய்க்கு சீமந்தம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நாய்க்குட்டி சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு சீமந்தம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும் அவர்கள் சீமந்தம் செய்து கொண்டாடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.