நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாக சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் புனித பயணிகளாக வந்துசெல்கிறார்கள். இந்தநிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிற்றையொட்டி இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலைபவனியில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி உன்னதங்களிலே ஒசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஓசன்னா எனபாடல்களை பாடி பவனியாக சென்றனர். இந்த பவனி பேரலாயத்தின் முகப்பு பகுதியில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தின் கீழ்க்கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து பேராலயத்தில் குருத்தோலைஞாயிறு சிறப்பு பிரார்தனை நடைபெற்றது. குருத்தோலை ஞாயிற்றையொட்டி இன்று வேளாங்கண்ணியில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனை நடைபெறுகிறது.
ஒடாச்சேரில் இருந்து நாகை நகராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் உடைந்தில் வீணாகும் தண்ணீர்
நாகை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயன்பாட்டிற்கு பல வருடங்களாக குடிதண்ணீர் திருவாரூர் மாவட்டம் ஒடாச்சேரயில் இ ருந்து கீழ்வேளூர் ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக இரும்பு பைப் மூலம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லபட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாகை அருகே சங்கமங்கலம் தாமரைக்குளம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத காலமாக மக்கள் குடிக்கும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குளத்தில் சென்று குளம் நிரம்பி விட்டது.
இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் அதை கண்டுகொள்ளவில்லை என புகார் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் கோடைகாலத்தில் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக பல்வேறு கிராம மக்கள் அலையும் நிலையில் அதிகாரிகள் பொறுப்பற்று இருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வீணாகி குளத்தில் செல்வதை தடுத்து சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.