சீர்காழி அருகே வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது மின்கம்பம் முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைரவனிருப்பு  கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான ஸ்விப்ட் டிசையர் சொகுசு காரை வீட்டின் வெளியே வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அவர் வீட்டு வாசலில் இருந்த மின்கம்பம் காரின் மீது முறிந்து விழுந்துள்ளது. இதனால் கார் முன்பக்கம்  உடைந்து கார் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மணிகண்டன் கூறுகையில், மாதம் மாதம் மின் பராமரிப்பு காரணத்திற்கா ஒரு நாள் முழுவதும் மின்நிறுத்தம்  செய்கின்றனர். அது போக காரணமே தெரியாத நிலையில் பல மணிநேரம் மின் நிறுத்தம் இப்பகுதிகளில் நடைபெறுகிறது. 


Delhi Air Pollution: புகை மண்டலமாக மாறிய டெல்லி: 'நினைத்த நேரத்தில் வாகனங்கள் ஓட்ட முடியாது' - கட்டுப்பாடுகள் விதித்த அரசு!




ஆனால், மின் பராமரிப்பு பணியின்போது இங்குள்ள மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் எதுவும் அகற்றப்படாமல் இருந்து வந்தது. மழைக்காலம் என்பதால் இன்று மரம் முடிந்து மின்கம்பியில் விழுந்து, இதனால் அருகில் இருந்த மின்கம்பத்தில் ஸ்டே கம்பி அருந்து பல மாதங்கள் கடந்த நிலையில், மின்கம்பம் சப்போட்டுக்கு எதுவும் இன்றி ஆபத்தன நிலையில் இருந்து வந்ததது. இது குறித்து பல முறை மின்சார வாரிய அலுவலர்களிடம் தெரிவித்தும் அவர்கள் அதற்கான பணியினை மேற்கொள்ளாத சூழலில் தற்போது அருகில் இருந்த பூவரசன் மரம் விழுந்து  மின்கம்பம் கார்மீது சாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது எனவும், நல் வாய்ப்பாக அருகில் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.  


SL Cricket Board: இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்னை என்ன? கூண்டோடு கலைக்கப்பட்டது ஏன்? மீண்டு வருமா?




இந்நிலையில் தகவல் அறிந்த அங்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து கார்மீது விழுந்த மின்கம்பதை அகற்றினர். மேலும், மீண்டும் வேறொரு மின்கம்பத்தை நட்டு மின்விநியோகம் வழங்க அப்பகுதி உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் சென்னை சென்றுள்ளதால் அவர் இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்த பிறகே புதிய மின்கம்பம் நடப்பட்டு மின் இணைப்பு வழங்க முடியும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளதால் எப்போதும் மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.


Ethirneechal: கோயிலில் நேருக்கு நேர் சந்திக்கும் ஜீவானந்தம் - ஈஸ்வரி.. போட்டுக் கொடுத்த ஜான்சி.. எதிர்நீச்சலில் இன்று!




மேலும் சீர்காழி பகுதி பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் அதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத நிகழ்வாக சீர்காழி மின்வாரியம் மிக மோசமாக செயல்படுவதாகவும், நாள்தோறும் புதுபுது பிரச்சினை இங்கு நிலவுவதாகவும் அதற்கு இங்குள்ள மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.


Game Of Thrones: இனி தமிழிலும் பார்க்கலாம்.. மாஸ் காட்டவரும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தமிழ் டப்பிங்.. எந்த ஓடிடி தெரியுமா?