மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறை ஜங்ஷனில்  புதிதாக அமைக்கப்பட்ட உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிஎம்ஐ சரிபார்க்கும் இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். 


Watch video | ”மகுடம் வருது ..சத்தம் அதிகரிக்கிறது” - பொன்னியின் செல்வன் காட்சியை விளக்கும் மணிரத்தினம் !



கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


மேலும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார். ஆய்விற்கு வந்து  தென்னக ரயில்வே   பொது மேலாளரிடம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை ஜனசதாப்தி விரைவு ரயிலாக மாற்றி தினமும் இரண்டுமுறை சென்னை சென்றுவர இயக்கவும், நாகூர் - பெங்களூரு பாசஞ்சர் ரயில், மயிலாடுதுறை - விழுப்புரம், திருச்சி பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.




அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை ஆய்வு பணிகளை மேற்கொள்வதாகவும், கொரோனா தொற்று பரவலால் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உருமாறி ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. தொற்று குறைந்த பிறகு அவற்றை மீண்டும் இயக்குவது குறித்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


STR | VTK | முத்துவின் பயணத்தை காண தயாராகுங்கள்! - நாளை வெளியாகிறது வெந்து தணிந்தது காடு glimpse!



Farmers Protest Called Off | கோரிக்கைகள் ஏற்பு: முடிவுக்கு வந்த டெல்லி விவசாயிகள் போராட்டம்!


மேலும் தொடர்ந்து பேசியவர், காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது என்றும், 2022-2023 ஆம் ஆண்டு நிறைவு பெறும் எனவும், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் வரும் மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடைய உள்ளது. மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் பயணிகளின் வசதிக்காக விரைவில் பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது ரயில்வே அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Shruti and Akshara | இதுதாம்பா உண்மையான Sister's Goal ! - ஸ்ருதிக்கு அம்மாவாக மாறிய அக்‌ஷராஹாசன்!