உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் தற்போது மும்பையில்தான் அதிக நேரம் செலவிட்டு வருகிறனர். கமலுக்கு  ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா என இரு மகள்கள் இருப்பது நாம் அறிந்ததே. ஸ்ருதி தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக அறியப்பட்டாலும் , சமீப காலமாக தமிழ் சினிமாவில் அவருக்கான மவுசு குறைந்துள்ளது. தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவ்வபோது ஃபேஷன் ஷோ மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அக்‌ஷரா அவ்வபோது கோலிவுட்டில் தலைக்காட்டி வருகிறார். இறுதியாக கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தும் அக்‌ஷராஹாசன் , இயக்கத்தில் அதிக நாட்டம் கொண்டவர். தனது சினிமா கெரியரை உதவி இயக்குநராக தொடங்கினார்.அவரது அக்கா ஸ்ருதிஹாசன் பாடகியாக தொடங்கினார்.






என்னாதான் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா இருவரும் தங்கள் கெரியரில் பிஸியாக இருந்தாலும் , அவ்வபோது இருவரும் ஒன்றாக நேரம் செலவிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்த  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அக்‌ஷராஹாசன் ஒரு அம்மாவை போல தனது அக்காவிற்கு தலையில் எண்ணை வைத்து விடுகிறார், அதனை வீடியோ எடுத்து ஸ்ருதிஹாசன் தனது ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 







ஸ்ருதிஹாசன் மன அழுத்தத்தால் சிறு வயது முதலே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். மன அழுத்தம் இருந்தால் மற்றவர்களிடம் பகிர வேண்டும் எனக்கான சூழல் அப்படி அமைந்திருக்கவில்லை என கூறிய ஸ்ருதியிடம், ஏன் அக்‌ஷரா இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த ஸ்ருதி, சிறுவயதில் அவள் குழந்தையாக இருந்தாள்..இப்போது அவள் எனக்காக இருப்பாள் என தெரிவித்திருந்தார். . ஸ்ருதியின் தற்போதைய காதல் மற்றும் அவரின் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையிம் அக்‌ஷராவிடம் பகிர்ந்துக்கொள்வாராம்.கமல்ஹாசன் மற்றும் சாரிகா இருவரும் விவாகரத்து பெற்று , தனித்தனியாக வாழ்ந்து வரும் சூழலில் தற்போது சகோதரிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வருவது the real sisters goal க்கு உதாரணமாக இருக்கிறது.