மாநாடு படத்தை முடித்து கொடுத்த கையோடு சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார்.  மாநாடு படத்தின் வெற்றி அவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. சிம்புவிகு மாபெரும் கம் பேக் கிடைத்தாலும் தற்போது கூடுதல் பொறுப்புகளும் அதிகமாகிவிட்டது. அடுத்தடுத்து முக்கியமான இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகிவிட்டார் சிம்பு.குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானதும் , அந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். சிம்புவின் 47 வது படமான உருவாக உள்ள இந்த புதிய படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில்  வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.. STR , GVM  கூட்டணியில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு ’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது முழு மூச்சில் நடைப்பெற்று வருகிறது. இது குறித்த அறிவிப்பை சிம்புவே வெளியிட்டிருந்தார்.






 முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில்   விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள்  வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் எந்த காலத்திற்கும் ஃபிரஷ் ஃபீலை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  தற்போது உருவாக உள்ள 'வெந்து தணிந்தது காடு ‘படம் இந்த STR , GVM  கூட்டணியின் மூன்றாவது படம் . இவர்களில் முந்தைய படங்களுக்கு இசையமைத்த எ.ஆர்.ரஹ்மானே வெந்து தணிந்தது காடு படத்திற்கும்  இசையமைக்க உள்ளார். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தில் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை நாளை (டிசம்பர் 10 ) வெளியிடுகின்றனர் படக்குழு. படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் முத்து. சிம்பு தனது சமூக வலைத்தள பக்கங்களில் “முத்துவின் பயணம் குறித்த கிளிம்ஸ் வீடியோ “ என குறிப்பிட்டுள்ளார்.







கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற  படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட  படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.