மயிலாடுதுறை அருகே பள்ளிக் கல்வித் துறையால் கடந்த மாதம் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ரிஷிபாலன் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில்  ரூ.10 லட்சத்துக்கான காசோலையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கிய நிகழ்வில் மாணவரின் தாய் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுதது சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறையால் கடந்த ஆகஸ்ட் மாதம்  24 -ம் தேதி மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவர்  மகன் 17 வயது ரிஷிபாலன் 400 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடுதளத்தில் ஓடும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Continues below advertisement

Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

அந்த மாணவனின் உயிரிழப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காட்டுச்சேரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை துவக்கிவைக்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர், தமிழக முதலமைச்சரின் வருகை காரணமாக தாமதமாக வந்ததால் தான் மாணவரின் உயிர் பறிபோயுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Sanatana Dharma: சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட விரும்பும் I.N.D.I.A கூட்டணி... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இந்நிலையில், ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது வேதனை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த  சூழலில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

All Caste Priests Scheme: 'கருவறைக்குள் இனி கரு சுமக்கும் பெண்களின் குரல்'- அர்ச்சகராகும் மகளிருக்கு முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!

அதன்படி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாணவரின் குடும்பத்துக்கு பள்ளியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் வழங்கினார். இதில், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, உயிரிழந்த மாணவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாணவரின் தாய் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கு கூடி இருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.