மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.




இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.


Sanatana Dharma: சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட விரும்பும் I.N.D.I.A கூட்டணி... பிரதமர் மோடி குற்றச்சாட்டு




இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று இக்கோயிலுக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வந்து வழிபாடு செய்தனர். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணியின் போது பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் மற்றும் செப்பேடுகளை பார்வையிட்டனர்.


எல்லாருக்கும் எல்லாம்.. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!




பின்னர், முத்து சட்டைநாதர், மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர்,திருநிலை நாயகி அம்பாள், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,  சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி..? - நடந்தது என்ன?