மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பட்டது. இவை அனைத்தும் இரண்டடுக்கு போலீசார் பாதுகாப்புடன்  கோயில் சன்னதியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இன்று நேரில் பார்வையிட்டார்.




அதனைத் தொடர்ந்து சிலைகள் மீட்கப்பட்ட நந்தவனப் பகுதியை பார்வையிட்ட அவர் சிலைகளின் தன்மை குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது: சீர்காழி நகர் முழுவதுமே சிலைகளை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்தேன். இது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அந்த சிலைகளை இங்குள்ள கோயில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு வசதிகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 


12 Hours Work: 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து கிளம்பிய எதிர்ப்பு..தொழிலாளர் சங்கத்தில் போராட்டம் அறிவிப்பு!




இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பகத்தில் வைக்கப்படும் சிலைகளே அவ்வப்பொழுது மாறிவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்க திராவிட மாடல் அரசினை நம்புவதற்கு இப்பகுதி மக்கள் தயாராக இல்லை என தெரிவித்தார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல கோடி ரூபாய்கள் நிதி முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.


Wrestlers Protest: பாலியல் தொல்லை.. 3 மாதங்களாக FIR பதிவு செய்யாத போலீசார்.. போராட்டத்தில் குதித்த வீராங்கனைகள்..!




குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 421.9 கோடி ரூபாய் வரை களவாடப் பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். இதுபோல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் இங்கேயே வைத்து பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அரசின் பாதுகாப்பில் உள்ள சிலை பாதுகாப்பதில் 300 சிலைகள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். எனவே இங்குள்ள சிலைகள் அனைத்தும் ஆதினத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இங்கேயே பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Naan Mudhalvan: நான் முதல்வன்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர்கல்வி ஆலோசனைக் குழு- விவரம்




கர்நாடக தேர்தலை பொருத்தவரைக்கும் அதிமுகவின் கூட்டணி என்பது தமிழகத்தில் தொடர்கிறது. மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவர்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல்தான் தற்போதைய தேர்தலிலும் அவர்கள் தனியாக வேட்பாளர்களை நியமித்துள்ளனர் இதில் எந்த பிரச்சனையும் இல்லை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது எனவும் தெரிவித்தார்.


TN Corona Spike:சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலை என்ன?


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற