12 Hours Work: 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து கிளம்பிய எதிர்ப்பு..தொழிலாளர் சங்கத்தில் போராட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அதற்கு தொழிலாளர் நலச்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Continues below advertisement

12 மணி நேர சட்ட மசோதாவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென பலரும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் 12 மணி வேலை நேர சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த முடிவானது சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து  கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலை நிறுத்த நோட்டீஸ் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 மணி நேர வேலை சட்டம் 

கடந்த 2020 ஆம் ஆண்டு 12 மணி நேர வேலை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததை தொடர்ந்து மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்ட மசோதாவின் படி, 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம்.  12 மணி நேரம் வேலை செய்யலாமா வேண்டாமா என்பதை தொழிலாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். தொழிலாளர்களின் ஒப்புதலுடன் தான் இது நடைமுறைப்படுத்தப்படும் . 

அமைச்சர்  சொல்வது என்ன? 

12 மணி நேர வேலை சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். அதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தக்கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக மின்னணுவியல் துறை நிறுவனங்கள், தோல் அல்லாத காலணியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola