குறுவை சாகுபடிக்காக இந்தாண்டு  ஜீன் 12-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீர் திறத்துவிட்டுள்ள நிலையில், கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு தண்ணீர் வர காலதாமதம் ஆகும் என்பதால் நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 




இதனிடையே தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.



‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!


இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஆறுகள், வாய்க்கால்கள்  தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. சீர்காழியை அடுத்த தென்னலக்குடி என்ற இடத்தில் கூப்பிடுவான் ஆற்றின் கதவணை அருகே தூர்வாரும் பணிகளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அவர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு வந்த விவசாயிகள் தூர்வாரும் பணிக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் கூறி மனு அளிக்க காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர், விவசாயிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாததா? இப்போது மட்டும் எப்படி மனு கொடுக்க வரலாம் என்று கூறி அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அமைச்சரிடம் மனு கொடுக்க கூடாது என்று விவசாயிகளிடம் மிரட்டல் தோணியில் கூற அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட சீர்காழி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுவெளியில் அமைச்சரிடம் மனு கொடுக்க கூட விவசாயிகளை அனுமதிக்காமல் திமுகவினர் அச்சுறுத்திய சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!