தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.




ஆனால் கடந்தாண்டு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாக பல்வேறு தரப்பினர் இடையே இருந்து குற்றச்சாட்டு எழுந்தது, இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கக்கூடிய பொருட்களின் அளவை குறைத்து, பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் 1000 ரூபாய் ரொக்கம் என தமிழக அரசு அறிவித்து அதனை தற்போது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் உறக்கம் வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், இரண்டு பொருட்கள் மட்டும் வழங்கி ஆயிரம் ரூபாய் வழங்கியது பொது மக்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்தது.


Ilayaraja wishes RRR team : "கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்" - ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு இசைஞானி வாழ்த்து...




இந்நிலையில் அந்த குறையை போக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 - வது வார்டு பனமங்களம் பகுதியின் நகர் மன்ற உறுப்பினரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முழுமதி இமயவரம்பன் தனது வாடிற்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி உள்ளார். 


NEET: நீட் தேர்வு விவகாரம்; சட்டப்பேரவையில் காரசார விவாதம் - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் என்ன..?




அந்த வகையில் தனது வார்டின் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக மகிழியுடன்  கொண்டாடிட ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தங்கள் பகுதியில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட  குடும்பதாரர்களுக்கும் அவர்களது இல்லத்திற்கே நேரடியாக தேடி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை சொந்த செலவில் வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார். இதற்கு சீர்காழி நகராட்சியில் உள்ள மற்ற வார்டு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




மேலும் சிலர் கூறுகையில் அரசு அறிவித்து கடந்த இரண்டு நாட்களாக வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன்கள் கூட முழுமையாக இன்னும் தங்கள் கைகளுக்கு வராத நிலையில் அதற்காக காத்திருக்கும் சூழலில் நகராட்சி வார்டு கவுன்சிலர் தனது சொந்த செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை வீடு தேடி வந்து வழங்குவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


TN Weather Update: ஊட்டியில் உறைபனி.. குறைந்து வரும் வெப்பநிலை.. பிற மாவட்டங்களின் வானிலை அப்டேட் இதோ..