இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இரண்டு பேரின் ரசிகர்களும் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ரத்னா, கோமதி மற்றும் சீர்காழி சிவகுமார் ஆகிய மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. காலை 6:00 மணிக்கு ரசிகருக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் தியேட்டர் வாசலிருந்து மண்டியிட்டு வந்து ஆளுயரத்திற்கு மேல் உள்ள விஜய் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பின்னர் படம் பார்க்க தியேட்டருக்குள் சென்றனர். நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்த நிலையில் விஜய் ரசிகர்கள் மண்டியிட்டு பாலபிஷேகம் செய்து படம் பார்க்க சென்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று தல தளபதி ரசிகர்கள் ஒற்றுமை பாதகை வைத்து சூடம் ஏற்றி பூசணிக்காய் உடைத்து அஜித் ரசிகர்கள் சீர்காழியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் இன்று உலக முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து தல தளபதி நண்பர்கள் என பேனர் வைத்துள்ளனர். அதில் துணிவுடன் வா நண்பா நாம் தான் தமிழ் சினிமாவின் வாரிசு என்று அந்த பேனரில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர்கள் விஜய் - அஜித் படத்திற்கு அஜித் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், சூடம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தும், பால் அபிஷேகம் செய்தனர். அஜித் வாழ்க தல அஜித் தல அஜித் என முழக்கங்களை எழுப்பினர், திரையரங்கில் அஜித் வரும் காட்சிகளில் ரசிகர்கள் முழக்கங்கள் எழுப்பி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.