திங்கள்கிழமை இரவு, மலை நகரமான ஊட்டியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 10 நாட்களாக குளிரின் தாக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் தற்போது வெப்பநிலை குறைந்து வருகிறது.  இது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஊட்டியில் இடத்தில் கடந்த 10 நாட்களாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. குன்னூர் மற்றும் வெலிங்டனின் சில பகுதிகளில் உறைபனி உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 15 மற்றும் பிப்ரவரி 26 க்கு இடையில், பொதுவாக ஊட்டியிலும் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸ் வரை குறையும். 2008 நவம்பரில் ஊட்டியில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸை எட்டியது. பிப்ரவரி 12, 2022 அன்று, ஊட்டியில்  வெப்பநிலை 0.4 டிகிரி செல்சியஸ்-ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முடியும் வரை பனிக்காலம் நிலவும். ஆனால், இந்த முறை, காலநிலை மாறுபாட்டால், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை ஊட்டியில் தாமதமாக தொடங்கின. இதனால் உறைபனியும் தாமதமாக தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் உறைபனி தொடங்கி ஜனவரி இரண்டாம் வாரம் வரை நீடித்து வருகிறது. 


ஆண்டு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, குளிர்காலம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். உறைபனி காரணமாக ஊட்டியில் தேயிலை தோட்டங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. இங்கு முதல் உறைபனி உருவானது 1819 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் என்பது குறிப்பிடத் தக்கது. 


 11.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


12.01.2023 முதல் 14.01.2023 வரை:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


Thunivu Review : வலிமை போச்சு... துணிவு என்னாச்சு.. கம்பேக் கொடுத்ததா அஜித் - வினோத் கூட்டணி? - முதல் விமர்சனம் இதோ..!


ம்mVarisu Review: அன்பு பாதி... ஆக்‌ஷன் மீதி... விஜய்க்கு கைகொடுத்ததா வாரிசு... முதல் எக்ஸ்பிரஸ் விமர்சனம் இங்கே..!


Varisu Thunivu Release: கையில் சரவெடி.. பரமா ஃபர்ஸ்ட் போய் படி.. சேட்டையை சேவையாக செய்யும் விஜய், அஜித் ரசிகர்கள்..!