நாடு முழுவதும் இன்று விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். விஜயதசமி விழாவை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று விஜயதசமி வாழ்த்து மற்றும் அருளாசி செய்தியினை வெளியிட்டுள்ளார். 





ஒரே நாளில் 2.50 லட்சம் பேர் சென்னையிலிருந்து ‛அவுட்’... தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களுக்கு படையெடுப்பு!


அதில் அவர் கூறியதாவது: அம்பாள் 9 நாள்கள் விரமிருந்து அம்பாள் அரசுனை வதம் செய்த நாள் விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விஜயன் (அர்ச்சுணன்) உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தின் பொந்தினில் வைத்து, அதனை மீட்டுத்ததனர். இதன் காரணமாகவே நம்மிடம் உள்ள ஆயுதங்களை எல்லாம் பூஜையில் வைத்து பூஜிக்கின்றோம். இன்றைய தினம் கலைமகளுக்கும் உகந்த தினம் என்பதால் மூல நட்சத்திரத்திலே ஆவாகனம் செய்து மூன்றாம் நாள் சரஸ்வதி பூஜையன்று சிறு குழந்தைகளுக்கெல்லாம் ஹரி அமோர்த்த சித்தம் என்று அவர்களுக்கு சொல்லித் தருகின்ற நாள். இன்றைய தினம் நூல்களை வைத்து பூஜை நடத்துவதோடு, அவற்றை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து நூல்களை படிப்போருக்கு எல்லா ஞானங்களும் கிடைக்கும். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு


THALA 61 | ”மூன்றாவது முறை கூட்டணி மக்களுக்கு அலுத்து போகாதா” - அஜித்தின் ஆன் தி ஸ்பாட் பதில்!


எனவே என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய நூலறிவு நமக்கு முக்கியமானது. திருமடங்களில் உள்ள பழைமையான ஓலைச் சுவடிகளில் சரஸ்வதி, துர்க்கை, இலக்குமி ஆகிய மூவரையும் மூன்று திருவுருவங்களாக வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்நாளில் உழவர்கள் ஏர்க்கலப்பை, மரக்கால், படி, தராசு ஆகியவற்றை வைத்து பூஜை செய்வதால் ஆயுத பூஜை என்று கொண்டாடுகின்றோம். கல்வி கற்பதற்குரிய நூல்கள். எழுதுகோல்கள்களை வைத்து பூஜிப்பதால் சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுகின்றோம். கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாகவும், கலைகளின் தொடக்க நாளாகவும் அமைந்துள்ள இந்த நாள். பாரத நாட்டில் தொடங்கிய இந்த விழாவை உலகெங்கும் கொண்டாடுபவர்களுக்கு ஆசிர்வாதங்கள் என அவர் தனது அருளாசி உரையில் கூறியுள்ளார்.


Heavy Rains: அடுத்தடுத்து இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: குடையோடு போங்க... குடையோடு வாங்க!