மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில்:



மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் மக்கள் தொகை 9 லட்சத்து 81 ஆயிரத்து 82 பேர், இதில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 7 லட்சத்து 61 ஆயிரத்து 320 நபர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 4 லட்சத்து 14 ஆயிரத்து 991 நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1 லட்சத்து 46 ஆயிரத்து 937 நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் குறைந்த அளவே தடுப்பூசி போட்டுள்ளனர். 




மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து வருகின்றது நாள் ஒன்றுக்கு 12 இல் இருந்து  15 பேர் வரை தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.  வெளியூரிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருபவர்களால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரேவழி தடுப்பூசி மட்டும்தான் என்றும் அவர்களிடம் தடுப்பூசி குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவரவர் ஊராட்சிகளில் அனைவரையும் தடுப்பூசி போட்டுகொள்ள நடவடிக்கை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்க கேட்டுகொண்டார்.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 23 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22 ஆயிரத்து 566 பேர் பூரண குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 229 பேர் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 312 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து குறிப்பிட்டதற்கது.


மயிலாடுதுறையில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் முடிவு