காவிரியில் வெள்ளப்பெருக்கு - சீர்காழி அருகே 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

சீர்காழி அருகே காவிரி ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் 5 கிராம மக்கள் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராமமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Continues below advertisement

சீர்காழி அருகே காவிரி ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் 5 கிராம மக்கள் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராமமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Continues below advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 17 -ஆம் தேதியில் இருந்து திருச்சி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


Viral Video : "தனுஷ் இவ்ளோ அழகா பியானோ வாசிப்பாரா” : ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த பிரசன்னா..

திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிக அளவில் வருவதால், கொள்ளிடம் மற்றும் காவேரி ஆற்றின் மூலம் தண்ணீர் பழையாறு, பூம்புகார் கடலுக்கு சென்று கலந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வாணகிரி கிராமம் செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தற்காலிகமாக தரைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்  மேலையூர் காவிரி ஆற்றில் கடைசி கதவணையில் இருந்து திடீரென அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால்,  அந்த பாலம் தற்பொழுது தண்ணீரில் மூழ்கி சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. 


இதனால் வானகிரி, கீழப்பெரும்பள்ளம், ஏராம்பாளையம், உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தக்கூடிய இந்த பாலம் தற்போது தண்ணீர் அதிக அளவில் பெருக்கெடுத்து செல்வதால் பாலம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி, அந்த வழியாக செல்லக்கூடிய கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அதிகளவில் தண்ணீர் செல்வதை சிறிதும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆற்றை கடந்து செல்கின்றனர். 

HBD Dhanush : 39-வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷ்.. பிரபலங்கள் எப்படி வாழ்த்து சொல்லிருக்காங்கன்னு பாருங்க..


இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லுவோர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சுற்றி வாணகிரி கிராமத்திற்கு வரகூடிய சூழ்நிலை உள்ளது. மேலும், நவகிர கோயிலான கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது ஸ்தலத்திற்கு நீண்ட தூரங்களில் இருந்து வரும் பக்தர்களும் சாலைவசதி இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இது தொடர்பாக  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola