Chess Olympiad 2022 Chennai LIVE Updates:சென்னையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று தொடங்குகிறது. மாமல்லபுரத்தில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 10...More
Chess Olympiad 2022 Chennai LIVE Updates:சென்னையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று தொடங்குகிறது. மாமல்லபுரத்தில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள். இதற்காக அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டதோடு பணிகள் நிறைவுற்று போட்டித் தொடருக்கான ஒத்திகை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரவுள்ளார். இதனால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில்இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்தது. அங்கு பல மாவட்டங்களுக்கும் சென்ற ஒலிம்பியாட் ஜோதிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் நாளை செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஒலிம்பியாட் ஜோதி போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரத்திற்கு நேற்று வந்தடைந்தது. இதற்கிடையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வரும் வீரர்களை வரவேற்க கற்தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறும் அரங்கை ஆய்வு செய்து வீரர்களுக்கு இரவு விருந்து அளித்தார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் செல்லும் பாதைகளில் 10 அடிக்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேரு உள்விளையாட்டரங்கில் இதற்கான தொடக்க விழா நடக்கவுள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Chess Olympiad 2022 LIVE: நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது- மு.க.ஸ்டாலின்
பன்னாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்களாவது ஆகும். ஆனால், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நான்கே மாதங்களில் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது தமிழ்நாடு. இதை சாத்தியப்படுத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Chess Olympiad 2022 LIVE: பிரதமர் உறுதியளித்திருந்தார்; நினைவலைகள் குறித்து மு.க.ஸ்டாலினின் நெகிழ்ச்சி பகிர்வு!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் அழைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். அப்போது, பிரதமர் மோடி என்னை போனில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர், “ நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்; நான் நிச்சயம் கலந்து கொள்வேன்.” என்று உறுதியளத்தார். என்று தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
Chess Olympiad 2022 LIVE: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாள் இது! செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக அமைந்துள்ளது என்றும், வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
Chess Olympiad 2022 LIVE: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அமைச்சர் துறைமுருகன், ஈபிஎஸ் வரவேற்பு
செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துறைமுருகன், எம்பி தயாநிதிமாறன், டிஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் புறப்பாடு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 87 குளிர்சாதன பேருந்துகளில் செஸ் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பிரதிநிதிகள் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் 37 பேருந்துகளும், 50 பேருந்துகள் பழைய மாமல்லபுரம் சாலையில் பயணிக்கின்றன.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ள இளையராஜா..!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாஜகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் இசையமைப்பாளர் இளையராஜா இடம்பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி - 7 முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
கேரள முதல்வர் பினராயி விஜயன், அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் முதல்வர் தமாங், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு 700 வகைகள் உணவுகள்..!
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 700 வகை உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளைக்கு பரிமாறிய உணவு மீண்டும் எப்போதும் பரிமாறப்படாத வகையில் உணவு ஏற்பாடுகளுக்கு செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 900 கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா உறுதி - அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடர் - இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சதுரங்கம் பிறந்த இடத்தில் தொடர் நடப்பதால் இந்தியாவிற்கு இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்றும், ஒட்டுமொத்த இந்தியக் குழுவிற்கும், பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க ஆவலோடு இருக்கிறேன் - பிரதமர் மோடி
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க ஆவலோடு இருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு - செஸ்ஸூடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே நடத்தப்படுவது நமது பெருமை என கூறியுள்ளார்.