தனுஷ்  :


கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் தனுஷ். ”இவரா ஹீரோ “ என்றவர்கள் எல்லாம் , தனுஷின் கால் ஷீட்டிற்காக வரிசையில் காத்திருப்பதை நாமே அறிவோம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதராணமே தனுஷ்தான் என்றால் மிகையில்லை. தனுஷ் இன்று (ஜூலை 28 ) தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  அவருக்கு இந்திய ரசிகர்கள் , திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ், சந்தோஷ் நாராயணன், பிரசன்னா உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . இது தவிர பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நானே வருவேன் , வாத்தி , திருச்சிற்றம்பலம் படக்குழுவினர்  தனுஷின் போஸ்டர்களை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவ்வித்துள்ளனர்.






பிரகாஷ் ராஜ் வாழ்த்து :


தனுஷுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் தனுஷ். தொடர்ந்து எல்லையை தேடுங்கள்...எப்போதுமே ஆசிர்வதிக்கப்படவானக இருங்கள் . உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி “ என குறிப்பிட்டுள்ளார்.







சந்தோஷ் நாராயணன் வாழ்த்து :


தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “
பிறந்த நாள் வாழ்த்துக்கள்  டியர் பேபி டார்லிங் தனுஷ் சார். நீங்கள் ஒரு சிறப்பான நபர் மற்றும் அபாரமான திறமைசாலி. இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் காவியமாக இருக்கும்!" என குறிப்பிட்டுள்ளார்.






சீனு ராமசாமி வாழ்த்து ;


இயக்குநர் சீனு ராமசாமி " உலகத்திற்கு , கிரே மேனிற்கு , சிவ பக்தருக்கு , எனது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என குறிப்பிட்டுள்ளார்.






பிரசன்னா வாழ்த்து :


தனுஷ் , பிரசன்னாவிற்கு அனுப்பிய பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.






 


Also Read | The Legend Review Tamil: அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்.. கலவரம் செய்த அண்ணாச்சி.. எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’? விமர்சனம்..!