மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் தமிழ் தொண்டாற்றி வரும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமான ஏராளமான கோயில்கள் உள்ள நிலையில், தருமபுர ஆதீனத்திற்கு அருகே ஆதீனத்துக்குச் சொந்தமான தருமபுரம் கல்லூரி மற்றும் தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 


மீண்டும் மாரிதாஸ் கைது... திண்டுக்கல் மாணவி இறப்பு... - தென் மண்டலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்




Women Marriage Age: பெண்ணின் திருமண வயதை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
 
இந்நிலையில்  தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அஸ்விந்த். அதே பகுதியில் கட்டடத் தொழிலாளி அன்பழகன் என்பவரின் மகனான அஸ்விந்த் அண்மையில் மதுரையில் நடைபெற்ற சப்-ஜூனியர் சிலம்பப் போட்டியில் பங்கேற்றார். அதில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பலரை எதிர்த்து சிலம்பம் சுழற்றி  மாநில அளவில் 3- ஆம் இடத்தையும், மதுரை மண்டல அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். 


Carl Hooper Birthday: இந்தியாவிற்கு எதிராக பாயும் மேற்கு இந்தியன்... 90 கிட்ஸின் உண்மையான ஆல்-ரவுண்டர் ஹூப்பர்!




Watch Video: ‛என்னை சங்கினு சொன்ன....’ செருப்பை தூக்கி எச்சரித்த சீமான்!


அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர் அஸ்விந்த் அவர் பயிலும் பள்ளி மாணவர்களையும் சிலம்பம் கலையில் ஆர்வம் ஏற்ப்படுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் சிலம்பம் சுற்றிக்காட்டி சக மாணவர்கள் மத்தியில் அசத்தினார். தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர் அஸ்விந்த், அவரது பெற்றோர் அன்பழகன், ரேணுகா ஆகியோர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அவரிடம் சான்றிதழ், விருது மற்றும் பதக்கத்தைக் காண்பித்து அருளாசி பெற்றனர். இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.


வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப் பக்கத்தில் தொடர...


காந்தியை கொன்றவர்கள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள் - 7 பேர் விடுதலை குறித்து கொளத்தூர் மணி கருத்து