யூடியூப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டார். இதுகுறித்து திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன்  மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504  505 (1)b 505 ( 2)) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாரிதாஸை கைது  மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.



இதற்கிடையே  தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டது.


இந்தநிலையில், மாரிதாஸ் கைதானது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், மாரிதாஸ் போன்றவர்கள் தங்கள் கருத்துகளை வீடியோ வாயிலாக தெரிவிக்கும்போது, அவர்களை ஒடுக்கும் விதமாக அவர்கள் மீது சட்டம் பாய்கிறது. இதேபோல், தான் என் தம்பி சாட்டை துரைமுருகனும் கருத்து தெரிவித்தபோது கைது செய்யப்பட்டார். இதில், கருத்து சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் எங்கு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். 


சீமான் பேசிய இந்த கருத்தை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவரை சங்கி என்றும், மாரிதாஸ் ஆதரவாளர் மற்றும் பிஜேபியின் பி டீம் என்று திமுகவினரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். இந்தநிலையில், சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய சீமான் திமுக அரசை வன்மையாக கண்டித்தார். 



அதில், என் தம்பி சாட்டை துரைமுருகனின் விடுதலை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுகவினர் மற்றும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது குரல் கொடுக்கவில்லை. அப்படி என்றால் நீங்கள் தான் சங்கி. இதற்கு மேல் என்னை சங்கி என்று சொன்னால் என்று சொல்லி தான் காலில் இருந்த கருப்பு சிவப்பு செருப்பை கழட்டி காண்பித்தார். தற்போது, சீமான் செருப்பை கழட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்






 




ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண