2021- 22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதனையடுத்து  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.  இதற்கு வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல் என்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.  இதனால் மத்திய அரசு தனது தவறான இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இன்று மற்றும் நாளை  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தது. அதன்படி 9 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று மற்றும் நாளை வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.



  



வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய கோரி மத்திய அரசின் தொழிலாளர் துறையின் கூடுதல் தலைமை தொழிலாளர் நல ஆணையர் எஸ்.சி. ஜோஷி கோரிக்கை வைத்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் வங்கி சட்ட திருத்த மசோதாவை நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவர மாட்டோம் என உறுதி அளித்தால் வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வதாக  கூறிய தொழிற்சங்கங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.





இந்நிலையில்  நாடு முழுவதும் ஏற்கனவே அறிவித்தபடி இன்று  மற்றும் நாளை  பல லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என தங்களின் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பெருந்தொற்று காலத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் வேலை நிறுத்தம் குறித்து பரிசிலிக்குமாறு தனது ஊழியர்களை கேட்டு கொண்டிருக்கிறது. அதேவேளையில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினால்   பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, யூகோ வங்கி ஆகிய வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 2 நாட்களுக்கு  ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  




மேட்டூர் அணையின் நீர் வரத்து 6,400 கன அடியில் இருந்து 8,600 கன அடியாக அதிகரிப்பு


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுமார் 50 மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் வங்கிகளின் வேலை நிறுத்தம் அறியாத பலர் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.