மேலும் அறிய

வாக்கு எண்ணும் மையத்திற்கு அதிகாலையில் வந்த 5 கண்டெய்னர் லாரிகள் - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு அதிகாலையில் வந்த 5 கண்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்கான, வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென 2 மணிளவில் 5 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தன. இந்த கண்டெய்னர் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. இதைக்கண்ட தி.மு.க.வினர் சந்தேகம் அடைந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு அதிகாலையில் வந்த 5 கண்டெய்னர் லாரிகள் - தூத்துக்குடியில் பரபரப்பு

அப்போது அதற்கு பதிலளித்த தேர்தல் அலுவலர்கள், இந்த கண்டெய்னர் லாரிகளில் இருப்பவை பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்காக கூடுதலாக கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்படாத வாக்கு இயந்திரங்கள் என்று விளக்கம் அளித்தனர். ஆனாலும், திருப்தியடையாத தி.மு.க.வினர் கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி விளக்கம் அளித்தார். மேலும், கண்டெய்னர் லாரிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர், தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Samsung Galaxy Price Hike: சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
Netanyahu in UN:
"ஈரான் மீதான தாக்குதல்..." ஐ.நா-வில் பேசிய நெதன்யாகு; வெளிநடப்பு செய்த தூதர்கள்; நடந்தது என்ன.?
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Embed widget