மேலும் அறிய

நீர், மோர் பந்தல் அமைத்து உதவுங்கள்; அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் வலியுறுத்தல்

கோடை காலத்தை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் நீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும், தன்னலம் கருதாமல் பொது நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவதிலும், மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க.வின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், அ.தி.மு.க.வின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும், தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.

நீர், மோர் பந்தல் அமைத்து உதவுங்கள்; அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் வலியுறுத்தல்

அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும், பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு, சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

மேலும், கடந்த சில நாட்களாக  கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியும், கொரோனா தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, ஆங்காங்கே கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்குமாறும், மேற்கண்ட பணிகளை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்திட வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Embed widget