கைதி எண்-7691, சிறையில் சந்திரபாபு நாயுடு.. 


ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்ற காவலின் போது வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளர்.பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வாசிக்க..


 I.N.D.I.A கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம்


I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற உள்ளது. "I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் நான் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால், அதே நாளில் நான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது!மேலும் வாசிக்க,,


மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரேசில் பிரதமர் மரியாதை


டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18ஆவது மாநாடு நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது. ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் (One Earth, One Family, One Future) என்ற கருப்பொருளுடன் மாநாடு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் வாசிக்க..


கருத்து சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்போம்


சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் மத்திய அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.மேலும் வாசிக்க.


தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.. 


நாட்டிலே காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபாடுள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்றாக இருப்பது மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் வாசிக்க..


"இரண்டு பெயர்களையும் ஏற்று கொள்கிறேன்" -ராகுல் காந்தி


டெல்லி ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்திற்காக உலக தலைவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர் என குறிப்பிடுவதற்கு பதில் பாரத குடியரசு தலைவர் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.இதை தொடர்ந்து, ஆசியான் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான அறிவிப்பிலும் இந்தியா என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பே, மற்றொரு சர்ச்சை வெடித்தது. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கையின் முன்பு இந்தியா என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் வாசிக்க..