தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.


அதிக டவுன்லோட் வேகம்கொண்ட நெட்வொர்க் `ஜியோ’... ட்ராய் அறிவிப்பு.. அடுத்தடுத்த இடங்களில் யார்?




இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு, இரண்டாவது முறை வந்துள்ளேன். கோயிலை சிறப்பாக பராமரித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின், முதல் முறை தமிழகம் வந்துள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார். 


காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா? - சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிமன்றம் கேள்வி




அதன்படி இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்குச் சென்று, அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 


என் அம்மாவை அசிங்கமா பேசிட்டு.. சீதை, சந்தோஷி, துர்க்கையம்மனையும் கும்பிடுறாங்க - சித்தார்த்


முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாம் அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஆதரவு கேட்ட சந்திரசேகர ராவ், அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 



இதற்காக தனி விமானம் மூலம் நேற்று ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது, திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை சந்திரசேகர் ராவுக்கு ஸ்டாலின் பரிசாக அளித்தார்.


சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண