இளைஞர் மணிகண்டனின்(manikandan) உடல் இரண்டுமுறை உடற்கூராய்வு செய்யப்பட்டுவிட்டது எனவும் அவர் விஷமருந்திதான் இறந்துள்ளார் எனவும் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கல்லூரி மாணவன் மணிகண்டன் வீட்டில் இருந்து  விஷ பாட்டில்  கைப்பற்றப்பட்டது. மணிகண்டன் இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது. மணிகண்டன் உடன் பைக்கில் பயணித்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மணிகண்டன் குற்றப்பின்னணி இல்லாதவர். முதுகுளத்தூர் மணிகண்டன் போலீஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என அவர் தெரிவித்துள்ளார். 


முன்னதாக,


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்(Mudukulathur) அருகேயுள்ள நீர்கோழியேந்தலைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மகன் மணிகண்டன். கல்லூரி இறுதியாண்டு மாணவரான இவர், கடந்த  4ம் தேதி மாலை பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் தன் நண்பருடன் சென்றார். அப்போது போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். அப்போது, அவர் பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.


அதையடுத்து, போலீஸார் மணிகண்டனைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர், மணிகண்டனின் பைக், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். காவல் நிலையத்துக்கு வந்த மணிகண்டனின் பெற்றோர் லட்சுமணன், ராமலெட்சுமி, தம்பி அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.


இதனையடுத்து, வீட்டுக்கு வந்த பிறகு மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர், பரிசோதனை செய்துவிட்டு மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து பெற்றோர்கள், போலீசார் தனது மகனை விசாரணைக்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியதால்தான் உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டினார். ஆகவே, சம்மந்தப்பட்ட போலீசார்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என  மதுரை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தார். 


சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண