தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
21.09.2022 முதல் 23.09.2022 வரை: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
24.09.2022 மற்றும் 25.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: டீ கொடுக்கும்போது உருவான காதல்! ஹாஸ்பிடல் உதவியாளரை மணந்த பெண் டாக்டர்! அழகான காதல் கதை!
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
21.09.2022 முதல் 23.09.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: House of the Dragon: நம்ம வீட்டுப் பெண் ரெனேராவோட கல்யாணம்... பாரம்பரிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் கல்யாணம்... மீம்ஸ் இறக்கும் நெட்டிசன்கள்!