’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உலகின் பாரம்பரிய மற்றும் கதிகலங்க வைக்கும் திருமணக் காட்சியை வழங்கி ’ஹவுஸ் ஆஃப் த டிராகன்’ தொடரின் சமீபத்திய எபிசோட் ரேட்டிங் அள்ளியுள்ளது.


ஆடல், பாடல் கொண்டாட்டம், பரிசுகள், மேளதாளங்கள் நிரம்பிய மகிழ்ச்சி ததும்பும் திருமணங்கள் பற்றி பேசினால் மற்றவர்கள் எப்படியோ,  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் நிச்சயம் அசௌகரியமாக தான் உணர்வார்கள்.


ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என காண்போரை உணரவைத்து திக் திக் திருமணக் காட்சிகளை வழங்கிவதில் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடருக்கு இணை வேறு எதுவுமில்லை!






தரமான 5ஆவது எபிசோட்!


இந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது அதன் ப்ரீக்வல் தொடரான ஹவுஸ் ஆஃப் த டிராகனின் சமீபத்திய எபிசோட்.  


தொடரின் முக்கியக் கதாபாத்திரமான ரெனேராவின் திருமணம் உச்சகட்ட பதட்டத்தோடும் பதைபதைப்போடும் ஒருவழியாக இந்த எபிசோடில் நடந்து முடிந்துள்ளது. பரபரப்பான இந்த திருமண எபிசோட் பார்வையாளர்களுக்கு காரசார தம் பிரியாணி உண்ட நிறைவை வழங்கி குதூகலப்படுத்தியுள்ளது.


 






மேலும் வழக்கம்போல் குபீர் சிரிப்பை வரவழைக்கும் மீம்ஸ்களைப் பகிர்ந்து நெட்டிசன்கள், குறிப்பாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியாகக் களமாடி வருகின்றனர். 


 






மறக்க முடியாத கேம் ஆஃப் த்ரோன்ஸ் திருமணங்கள்


கேம் ஆஃப் த்ரான்ஸ் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத எபிசோடுகள் ரெட் வெட்டிங் (Red wedding) மற்றும் பர்ப்பிள் வெட்டிங் (purple wedding). ரத்தம் தெறிக்கும் இந்தத் திருமணங்களை அழுதபடியும் பரபரப்புடனும் பார்த்து வெப் சீரிஸ் உலக ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடி வருகின்றனர்.


 






இந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஹவுஸ் ஆஃப் த டிராகன் தொடரின் இந்த சமீபத்திய எபிசோட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.