அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்றுமுதல் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்காக தமிழக போக்குவரத்து கழகம் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது tnstc என்ற செயலி வாயிலாகவோ ரிசர்வேஷன் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 


எப்படி முன்பதிவு செய்வது?


அரசு விரைவுப் பேருந்துகளில், ஏசி பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் https://www.tnstc.in/ என்ற இணையதளம், டிஎன்எஸ்டிசி செயலி உள்ளிட்ட அரசு செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுதவிர பேருந்து பயணத்துக்கென இருக்கும் ரெட் பஸ், டிக்கெட் கூஸ் போன்ற தனியார் புக்கிங் இணையதளங்கள் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையில் உள்ளோர் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


அதேபோல் அந்தந்த மாவட்டங்களிலும் நேரடியாக பேருந்து நிலையங்களிலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் நின்று டிக்கெட் புக் செய்ய அச்சம் கொண்டோர் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். தற்போது வரை 1,100 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் நிரம்பியவுடன் கூடுதலான பஸ்கள் முன்பதிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.


தீபாவளிப் பண்டிகைக்கு பயணப்பட்ட இன்னும் ஒருமாதம் தான் இருக்கிறது. இதனால், இந்த வாரம் டிக்கெட் முன்பதிவு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர பரபரப்பை எதிர்கொள்ள போக்குவரத்துக் கழகமும் தயாராக உள்ளனர். 


அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கவும், அதேபோல், அவர்கள் சென்னைக்கு திரும்பி வர 15 ஆயிரம் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 


6 முக்கிய இடங்களில் பேருந்து நிறுத்தம்:


கடந்த அதிமுக ஆட்சி காலம் முதல் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை தினங்களில் வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல 6 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழக அரசு 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைத்து மக்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 


கோயம்பேடு :


மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், காரைக்குடி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, செல்லம், இராமநாதபுரம், ஈரோடு, பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. 


தாம்பரம் மெப்ஸ்:


திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் 


தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்:


திண்டிவனம், திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம்


பூந்தமல்லி:


ஆரணி, வேலூர், ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி


மாதவரம்:


ஆந்திரா, பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை


ஊரப்பாக்கம்:


கோயம்பேடு தவிர ஊரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட இருக்கின்றனர்.