குடும்ப சலசலப்புகளுக்கு மத்தியில் இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம் ஹாரி இருவரும் மகாராணி எலிசெபத்துக்கு ஒன்றிணைந்து குடும்பமாக அஞ்சலி செலுத்தியது கவனமீர்த்துள்ளது.
Image Source: Twitter/The Royal Family
நேற்று (செப்.10) வின்ஸர் அரண்மனையில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியும், ஹாரி - மேகன் தம்பதியினரும் ஒன்றிணைந்து தங்கள் பாட்டி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருப்பு நிற உடையில் வின்சர் கோட்டைக்கு வெளியே கூடியிருந்த ஏராளமான மக்களை அப்போது அவர்கள் சந்தித்தனர்.
எலிசபெத் மகாராணியின் மகனும் அரச குடும்ப வாரிசுமான சார்லஸ் தன் 73ஆம் வயதில் முன்னதாக மூன்றாம் சார்லஸ் மன்னராக பிரகடனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், எலிசபெத் மகாராணி இறப்பதற்கு முன்பு அவரை காண்பதற்கு மனைவி மேகன் மார்க்கலை அழைத்து வர வேண்டாம் என தனது இளைய மகன் ஹாரியிடம் இளவரசர் சார்லஸ் (இப்போது மூன்றாம் சார்லஸ் மன்னர்) கூறியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகின.
மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பால்மோரல் கோர்ட்டுக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாக வியாழன் அன்றுதான் அங்கு சென்றுள்ளார்.
அதேபோல, வெள்ளிக்கிழமை அன்று முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியவரும் ஹாரிதான். இளவரசர் வில்லியமின் மனைவி கேட்டும் செல்லவில்லை என்றும் உண்மையில் மிக நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே அங்கு இருக்க வேண்டும் என்றும் ஹாரிக்கு சுட்டிக்காட்டப்பட்டதாகவும், மகாராணியை காண மேகன் வரவேற்கப்படவில்லை என்பதை சார்லஸ் மிகத் தெளிவாக ஹாரியிடம் கூறி இருக்கிறார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டு ஹாரி - மேகன் தம்பதியினர் நேர்காணல் ஒன்றை கொடுத்தனர். அது சர்ச்சையை கிளப்பியிருந்தது. ராஜ குடும்பத்தின் யார் பெயரையும் சொல்லவில்லை என்றாலும் இனவாதத்துடன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.