மனித குலம் தொடர்ந்து உயிர்ப்புடனும் அழகாகவும் இயங்குவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று காதல்!


நிறம், வர்க்கம், சாதி, மதம், பாலினம் என மனிதர்களுக்கிடையே நிலவும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் சக்தி காதலுக்குத்தான் உள்ளது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கூற்று மற்றும் நம்பிக்கை.


பாகிஸ்தான் ஜோடி


அப்படி உலகின் பொதுப்படையான எண்ணங்களைத் தகர்க்கும் அழகிய காதல் கதை ஒன்று  இணையத்தில் வைரலாகியுள்ளது


பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த ஜோடியின் காதல் கதை பலரது இதயங்களையும் வென்றுள்ளது.


பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் மருத்துவரான கிஷ்வர் சாஹிபா, தான் பணிபுரிந்த அதே மருத்துவமனையில் பணிபுரிந்த இளைஞர் ஹவுஸ் கீப்பிங் ஊழியரான ஷாஜத் என்பவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி திருமணமும் செய்துள்ளார்.


வேறுபாடுகளைக் களைந்த காதல்


அந்நாட்டின் ஒகாரா தாலுகா திபால்பூரில் வசிக்கும் இந்த ஜோடிக்கு இடையே வேலை, படிப்பு தொடங்கி பல வித்தியாசங்கள், சமூகம் கட்டமைத்துள்ள ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதும், இவற்றையெல்லாம் தகர்த்து இருவரும் திருமணம் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.


’மேரா பாகிஸ்தான்’ எனும் யூடியூப் சேனலுக்கு முன்னதாக பேட்டியளித்துள்ள இவர்களது வீடியோ அந்நாட்டில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.



சாதாரண ஹவுஸ் கீப்பிங் பணியாளரான ஷாஜத்தை மணக்கும் அற்புதமான வாய்ப்பை தான் இழக்க விரும்பாததால் அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியதாக மருத்துவர் கிஷ்வர் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.


வகுப்பு, வர்க்கத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளும் உலகில் தன் மனைவி கிஷ்வர் அவரது இதயத்தை மட்டும் வழங்கி திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஷாஜாத் தெரிவித்துள்ளார்.


பொதுவாக மருத்துவர்களின் அறைகளை சுத்தம் செய்து தேநீர் வழங்கும் பணியை மேற்கொள்ளும் சாஜித்திடம் ஒரு நாள் கிஷ்வர் சாஜித்தின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கியதைத் தொடர்ந்து, பேசி இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.


கேலி செய்த நண்பர்கள்


ஒருகட்டத்தில் மருத்துவர் கிஷ்வர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியபோது தனக்கு காய்ச்சலே வந்துவிட்டதாகவும் ஷாஜத் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் திருமணத்திற்குப் பின் நண்பர்கள் கேலி செய்ததன் காரணமாக கிஷ்வர் தன் மருத்துவர் பணியைத் துறந்துள்ளார்.


இந்த ஜோடி தற்போது புதிதாக கிளினிக் ஒன்றைத் திறக்க திட்டமிட்டுள்ளது.


இவர்களது காதல் கதையைப் பார்த்து இணையவாசிகள் அகமகிழ்ந்து லைக்குகளை வாரி வழங்கி நெகிழ்ச்சியுடன் காமெண்டுகள் பகிர்ந்து வருகின்றனர்.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Queen Elizabeth II Death : முதல்வர் ஸ்டாலின் முதல் ஜோ பைடன் வரை.. ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!


Liz Truss : எலிசபெத் ராணி முன்பு...பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட லிஸ் டிரஸ்.. பதவியேற்பு விவரங்கள்..