• Anbil Mahesh: ‘அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பி நாங்கள்’... ஆசிரியர்கள் பற்றி அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி..!


சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை தான் தவறாக நினைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருப்பதாக நினைக்கிறேன். அவரின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்கள் தங்கள் உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். போராட்டங்கள் மூலம் பல்வேறு விமர்சனத்தை முன் வைத்தாலும் ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை திமுக அரசு செய்யும்” என அன்பில் மகேஸ் கூறினார். மேலும் படிக்க



  • Udayanithi Stalin: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழர்களால் 22 பதக்கங்கள் - அமைச்சர் உதயநிதி பாராட்டு மழை


ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மேலும் படிக்க 



  • பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை: 50 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் இயக்கம்


உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. மேலும் பக்தர்கள் எளிதில் சென்று வரவும், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் செல்லவும் ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடிவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை விரும்புகின்றனர். மேலும் படிக்க 



  • “இதுதான் விலை; மீறாதீங்க” - ஆவின் பால் விற்பனையாளர்களுக்கு பறந்த அமைச்சரின் அதிரடி உத்தரவு


திண்டுக்கல்லிற்கு வருகை தந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்பொழுது ஆவின் நிர்வாகம் எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளைத் தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டில் உள்ள பிரச்சினைகளை சீர் செய்ததன் காரணமாக தற்பொழுது 8% விற்பனை பெருகி உள்ளது. மேலும் படிக்க



  • பூணூல் அணிவிக்கவா ஆளுநரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்? அமைச்சர் பொன்முடி காட்டம்


அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லாத, ஒற்றையாட்சி எற்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு என்கிற தலைப்பில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள், மதிமுக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க