உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன.


மேலும் பக்தர்கள் எளிதில் சென்று வரவும், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் செல்லவும் ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடிவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை விரும்புகின்றனர்.


Lokesh Kanagaraj: “விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்” .. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..!



இந்த ரோப்காரில் பக்தர்களின் நலன் கருதி மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடக்கும்போது அதன் சேவை நிறுத்தப்படும். அதன்படி, பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ம் தேதி தொடங்கியது. அதையடுத்து ரோப்கார் பெட்டி, உபகரணங்கள் எந்திரம் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இதற்கிடையே பராமரிப்பு பணிகள் ஏறக்குறைய முடிவடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் ரோப் காரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ரோப் கார் பெட்டிகளில் 300 கிலோ அளவில் பஞ்சாமிர்தப் பெட்டிகள் வைத்து இயக்கி சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ரோப் கார் சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பிறகு சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழுவினர் வந்து ரோப் காரை இயக்கி ஆய்வு செய்தனர்.


Ethirneechal : குழி தோண்டி புதைச்சுடுவேன்... அநாகரிகமாக பேசிய குணசேகரன்... அப்பத்தா கொடுத்த ஷாக்... எதிர்நீச்சலில் நேற்று



இந்த நிலையில் நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பழனி முருகன் கோவில் ரோப் காரில் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி தொடங்கிய வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவடைந்தது. தொடர்ந்து சோதனை ஓட்டம், வல்லுனர் குழு ஆய்வு நடைபெற்றது. அது வெற்றிகரமாக நிறைவு பெற்றதால் 50 நாட்களுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஞாயிற்றுக் கிழமை முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


IND vs AUS, World Cup 2023: அனல் பறக்கப்போகும் உலகக்கோப்பை போட்டி.. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்..!


அந்த வகையில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் 50  நாட்களுக்கு பிறகு பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.