திண்டுக்கல்லிற்கு வருகை தந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்பொழுது ஆவின் நிர்வாகம் எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.


ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளைத் தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டில் உள்ள பிரச்சினைகளை சீர் செய்ததன் காரணமாக தற்பொழுது 8% விற்பனை பெருகி உள்ளது. இந்த மாதம் கணக்கிட்டு பார்த்தால் மேலும் கூடுதலாக இருக்க வாய்ப்பு உள்ளது.


Israel War: உச்சக்கட்ட பதற்றத்தில் இஸ்ரேல்.. சிக்கியுள்ளார்களா தமிழர்கள்? உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!




ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனையும் மீறி விற்பனையாளர்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.


தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் மூலம் கையாளப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்கள் கையாளுகின்ற அளவினை பெருக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இன்றைக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே ஆவினுடைய  கொள்முதலை கையாள்வதற்கான திட்டங்கள் தொலை நோக்கு பார்வையோடு மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாநிலம்  முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு பல லட்சக்கணக்கான கறவை மாடுகள் புதிதாக வாங்குவதற்கு, குறைந்த வட்டியில் வங்கி கடனுக்கான ஏற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


Cauvery Issue: காவிரி விவகாரம்...தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்...முதல்வர் ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!




விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல வழிகளில்  முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களுடைய தேவை  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தற்பொழுது பட்டர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயக் பெருங்குடி மக்களுக்கு தேவையான கடன் உதவி மானியங்களை வங்கிகளில் பேசி குறைந்த வட்டிக்கு கடனும் பெற்றுத் தந்து வருகிறோம். நாட்டு இன மாடுகள் அழிந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து நாட்டு இன மாடுகளை  விவசாயிகளுக்கு கண்டறிந்து கொடுக்க வேண்டி உள்ளது.  இது எல்லாம் எங்கள் திட்டங்களில் இருக்கிறது’’ என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.