• Annamalai On DMK: மைதானத்தில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் - அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி


திமுக தலைமையிலான மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கான இடஒதுக்கீடு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாக அமல்படுத்தப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.


மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தி.மு.க  I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை அழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்தியுள்ளது. மேலும் படிக்க



  • Minister Udhayanidhi Stalin : ’இந்திய ரசிகர்கள் இப்படி செய்ததை ஏற்க முடியாது’.. கண்டனம் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


2023 உலகக் கோப்பையில் நேற்று  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை மோதலின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு  எதிராக இந்திய ரசிகர்கள் ’ஜெய் ஸ்ரீ ராம்’ ’ஜெய் ஸ்ரீ ராம்’ என குரல் எழுப்பினர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றன. மேலும் படிக்க



  • Navratri Festival: இன்று தொடங்குகிறது நவராத்திரி கொண்டாட்டம் - மதுரை மீனாட்சி அம்மன் - திருப்பதி கோயில் சிறப்பு பூஜைகள்


புவியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்திய மகிசாசுரன் என்ற அரக்கன் உடன், ஆதிபராசக்தி  தொடர்ந்து 9 நாட்கள் போரிட்டு 10வது நாள் வீழ்த்தி வதம் செய்ததாக நம்பப்படுகிறது. அதனை போற்றும் விதமாக நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் ஏராளமான சிலைகளை கொண்ட கொலு ஏற்பாடு செய்து 9 நாட்கள் இறைவழிபாடு செய்வது ஐதீகம். அதேபோன்று, கோயில்களிலும் இந்த நவராத்திரி விழ கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க



  • Weather Report: மக்களே வெளிய கெளம்பறீங்களா..! தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை அறிக்கை


15.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,  தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • Govt Exam Cheating: ”மத்திய அரசின் கடைநிலைப் பணிகள் 100% தமிழ்நாட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.” - ராமதாஸ் கோரிக்கை


ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்! சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் மாறாட்டம் செய்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் ஹரியானாவையும், தலா இருவர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் படிக்க