நாடக உலகின் தலைமையாசிரியர் என்று போற்றப்பட்டவர் சங்கரதாஸ்சாமிகள். இவர் 50க்கும் மேற்பட்ட நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நாடகங்கள் மூலம் பல்வேறு நாடக கலைஞர்கள் தங்களது வாழ்வாதரத்தை காப்பாற்றி நாடக கலையையும் வாழவைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நினைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பாக நடைபெற்றது. இதில் அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் என ஏராளமான தமிழ்த் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். கருந்தரங்கிள் நாடகத்தின் முக்கியத்துவம் பற்றியும், நாடகம் செய்த மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாடகக்கலை இயக்குநர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து கிராமங்களில் அதிகளவு நடத்தப்படும் வள்ளிதிருமண நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவு முழுவதும் நடைபெறும் இந்த நாடகத்தை சுருக்கி 2 மணி நேரத்தில் நடத்தி முடித்தனர். நகைச்சுவை நடிகர், துணை நடிகைகள், வள்ளி வேடம், நாரதர் வேடம், ராஜபாட் வேடம் என எல்லா கதாபாத்திர நடிகர்களும் மேடையில் அசத்தினர். அதே போல் கிராமிய பக்க வாத்தியங்களும் தங்களது பங்கிற்கு சிறப்பாக இசையை அமைத்தனர். கல்லூரி மாணவர்களுக்கு இந்த நாடகம் புதிய அனுபவமா இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்ட ஆர்.ஜே சிக்கந்தர் நம்மிடம் பேசுகையில்..,” அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பாக, நூற்றாண்டு நினைவு பன்னாட்டு கருத்தரங்கில், படைப்பாளிகளின் படைப்புகள் பல ஊர்களில் இருந்தும் பல நாடுகளில் இருந்தும் அரங்கேறியது. இந்த அறிவான நிகழ்வில் சகோதரர் அணிஸ் அவர்களின் சிறை இல்லவாசிகளின் கலைதிறன் அதிகபடுத்தி, அவர்களுக்கும் கலைதிறமையை மேம்படுத்தி பல வருடங்கள் சிறைவாசிகளை சந்தித்து பல மாதம் சிறையிலே தங்கி அவர்களுக்கு பயிற்சி பட்டறை அமைத்து இயல், இசை, நாடகம், பண்பாடு, மரபு ஆகியவற்றை கற்றுதந்து அவர்களுக்கு தன் திரைபடத்தில் திறமையை வெளிகொண்டுவர வாய்ப்பளித்ததும், சிறந்த படைப்பாளிகள் உருவானதும், தமிழ்திரை உலகம் சந்திக்க இருக்கும் கலைஞர்கள் பற்றியும் தன்னுடைய “சிறை கானா பற்றியும் மிக அருமையாக பகிர்ந்தது மெய்சிலிர்க்க செய்தது.
இந்த அமர்வில் தோழர் அன்பு அவர்களின் படைப்பு வலியாகவும், பல நபர்களுக்கு சிரமம் இல்லாமல் சிறப்பாக வாழ வழியாகவும் அமைந்தது. இந்த மிக பயனுள்ள வரலாற்று சிறப்புமிகுந்த நிகழ்வை ஒன்றிணைத்து ஒவ்வொருவர்க்கும் கலைதிறமையை மேம்படுத்த நூற்றாண்டு நினைவு பன்னாட்டு கருத்தரங்கை பிரபாகர் ஐயா சிறப்பாக அமைத்தது பெருமைக்குரியது” என்றும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!