• TN Rain Alert: இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தொடரும் கனமழை.. வானிலை சொல்வது என்ன?


குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  21.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதுதான்: பி.சுசீலா முன்னிலையில் மேடையிலேயே பாடிய முதல்வர் ஸ்டாலின்!


டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் பாடியது கலகலப்பை ஏற்படுத்தியது.   விழாவில் பின்னணிப் பாடகி பி.சுசீலா, இசைக் கலைஞர் பி.எம்‌. சுந்தரம்‌ ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதை பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, முதல்வர் சிறப்பு உரையாற்றினார். மேலும் படிக்க



  • பட்டமளிப்பு விழாவில் தடுமாறிய பாடகி பி.சுசீலா: தாங்கிப் பிடித்த முதல்வர் ஸ்டாலின்! நெகிழ்ச்சி சம்பவம்


டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெறக் காத்திருந்த பின்னணிப் பாடகி பி.சுசீலா, தடுமாறி நாற்காலியிலேயே சாய்ந்த நிலையில், அவரின் கைகளை முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்துக் கொண்டார். டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மேலும் படிக்க



  • AIADMK: பாஜக கூட்டணி முறிவு; கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்: இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 


2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளை பலப்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் களப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கூட்டணி யாருடன் வைப்பது, கூட்டணியை முறித்துக்கொள்வது, கூட்டணிக்கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கலாம், கேட்கலாம் என்பன உள்ளிட்ட செயல்பாடுகளிலும் இறங்கிவிட்டன. மேலும் படிக்க



  • Jactto Geo Protest: அரசு ஊழியர்களுக்கான ஜாக்டோ ஜியோ போராட்டம் திடீர் ஒத்திவைப்பு: என்ன காரணம்?


தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும், போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள், தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்து வருகின்றன. மேலும் படிக்க