• TN Schools Working Day: இனி சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு- என்ன காரணம்?


இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழைக் காலத்தை முன்னிட்டு விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாரந்தோறும் சனிக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முடிவு எடுக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • TN Rain Alert: விடாமல் பெய்யும் மழை! மிக கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்களில்...லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான  மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் படிக்க



  • Karthigai Deepam: திருவண்ணாமலை தீப திருவிழா.. காவல் தெய்வ உற்சவத்துடன் கோலாகலமாக இன்று தொடக்கம்


கார்த்திகை மாதம் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. எப்படி இந்த மாதம் சபரிமலை சீசன் என சொல்லப்படுகிறதோ, அதற்கு ஈடாக திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அருணாசலேஸ்வரர் கோயில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க



  • Diwali 2023 Business: தீபாவளி கொண்டாட்டம்.. ரூ.3.75 லட்சம் கோடிக்கு களைகட்டிய வியாபாரம் - முதலிடம் யாருக்கு தெரியுமா?


நடப்பாண்டு தீபாவளி சீசனில் நேரடி சில்லறை விற்பனை மற்றும் ஆன்லைன் தளங்களில் நடைபெற்ற விற்பனையானது இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.  இதுதொடர்பாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தீபாவளி பண்டிகையின் காரணமாக இந்தியாவின் சில்லறை சந்தைகளில் ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க



  • DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாடு : 3 லட்சம் பேரை நேரில் அழைக்க, பைக் பிரச்சாரப் பேரணி - உதயநிதி அதிரடி


மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், மிக முக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பது இளைஞரணி. இது அக்கட்சியின் தற்போதைய தலைவரான ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது என்பதும் அதற்கு முக்கிய காரணமாகும். 1980ம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டாலும், கடந்த 2007ம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்றது. மேலும் படிக்க