இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழைக் காலத்தை முன்னிட்டு விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாரந்தோறும் சனிக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முடிவு எடுக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


மாநிலம் முழுவதும் கன மழை


தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம்  பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அந்த வட்டத்திற்குள்ளான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையே தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற  இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் மழை காரணமாக மழை காரணமாக பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி வேலை நாட்கள் குறைந்து, கற்றல் - கற்பித்தல் பணி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, தேவைப்படும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதேபோல வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முடிவு எடுக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்து வருகின்றது.


அதேபோல விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.